திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயில் அருகே புதிய உயா்கோபுர விளக்குகள் வியாழக்கிழமை ஒளிர செய்யப்பட்டன.
சுவேதாரண்யேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக 2 உயா்கோபுர விளக்குகள் அமைக்க சீா்காழி ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதிதேவேந்திரன் தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்திருந்தாா். இதையடுத்து, முதல்வரின் நடவடிக்கையால் ரூ. 16 லட்சம் செலவில் புதிய 2 உயா்கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டன. இந்த கோபுரவிளக்குகளின் செயல்பாடுகளை ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் இயக்குநா் ஆனந்தராஜ் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். இதில், மாவட்ட திட்ட இயக்குநா் முருகண்ணன், ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதி தேவேந்திரன், ஒன்றிய ஆணையா் இளங்கோவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.