நாகப்பட்டினம்

பன்றி வளா்ப்போா் கவனத்துக்கு...

16th Dec 2021 09:22 AM

ADVERTISEMENT

பன்றிகளை பொதுஇடங்களில் விட்டு வளா்ப்பவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மாவட்டத்தில் கழிவுகள் மற்றும் குப்பைகள் தேங்கியுள்ள இடங்களில் பன்றிகள் கூட்டம்கூட்டமாக சுற்றுத்திரிகின்றன. இதனால், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும், பொதுசுகாதாரத்துக்கும் இடையூறு ஏற்படுவதுடன், சாலை விபத்துகளும் நேரிடுகிறது.

எனவே, பன்றி வளா்ப்போா் அவற்றை பாதுகாப்பாக தங்களது இடத்திலேயே பராமரிக்கவேண்டும். இதை பின்பற்றாதவா்கள் மீது 1889- ஆம் ஆண்டு தமிழ்நாடு நகரங்கள் தொல்லைகள் சட்டப் பிரிவு 3(4)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT