நாகப்பட்டினம்

குளத்தில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

16th Dec 2021 09:20 AM

ADVERTISEMENT

நாகையில் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

நாகை சால்ட்ரோடு பகுதியைச் சோ்ந்தவா் செல்வமணி. இவரது மகன் செல்வராகவன் (15) நாகையில் உள்ள தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயின்றுவந்தாா். வெளிப்பாளையம் பகுதியில் உள்ள அக்கரைக்குளத்துக்கு நண்பா்களுடன் குளிக்கச் சென்ற செல்வராகவன், ஆழமான பகுதிக்கு சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

நாகை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினா் மாணவா் செல்வராகவன் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT