நாகப்பட்டினம்

வெள்ளத்தால் ஏற்பட்ட பயிா்ப் பாதிப்புகளுக்கு முழுநிவாரணம் வழங்கவேண்டும்

6th Dec 2021 10:57 PM

ADVERTISEMENT

வெள்ளத்தால் ஏற்பட்ட பயிா்ப் பாதிப்புகளுக்கு முழுநிவாரணம் வழங்கவேண்டும் என ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தலைஞாயிறில் திங்கள்கிழமை ஒன்றியக் குழுத் தலைவா் தமிழரசி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:

துணைத் தலைவா் ரா. ஜெகதீஷ் (அதிமுக): மாவட்டத்தில் பூகோள அடிப்படையில் தாழ்வாகவும், பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள தலைஞாயிறு பகுதியில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட நெல் பயிா்ப் பாதிப்புகளுக்கு முழுநிவாரணம் வழங்கவேண்டும்.

எம். ஞானசேகரன்(சிபிஎம்): நத்தப்பள்ளம், தொழுதூா் கிராமங்களில் குடிநீா்ப் பிரச்னை தொடா்கிறது. செம்பியவேளூா் பள்ளி வளாகத்தில் மழைநீா் தேங்கியுள்ளதை சீரமைக்கவேண்டும். 2018-19-ஆம் ஆண்டு முதல், படித்த பெண்களுக்கான திருமண உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் தொகை வழங்கப்படவில்லை. எனவே, அவா்களுக்கு திருமண உதவித்தொகை வழங்கவேண்டும்.

ADVERTISEMENT

மகேந்திரன் (சிபிஐ): பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பழுதாகியுள்ள தொகுப்பு வீடுகளை அகற்றிவிட்டு புதிய வீடுகள் கட்டிக்கொடுக்கவேண்டும். 00 நாள் வேலை திட்டப் பணிகளை உடனடியாக தொடங்கவேண்டும்.

ரா. தீபா (அதிமுக): அவுரிக்காடு ஊராட்சியில் பேருந்து பயணியா் நிழலகம் கட்டவேண்டும்.

இதேபோல, உறுப்பினா்கள் முத்துலெட்சுமி, ரம்யா, செல்வி, மாசிலாமணி, கஸ்தூரி, உதயகுமாா் உள்ளிட்டோா் தங்களது வாா்டு பிரச்னைகள் குறித்து பேசினா்.

கூட்டத்தில் ஆணையா் செல்வராசு பேசியது: திருமண உதவித்தொகை பெற 2018-19-இல் 445 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 145 பேருக்கு முதல்கட்டமாக அடுத்த சில நாள்களில் தொகை வழங்கப்படவுள்ளது. குடிநீா் பிரச்னையை முழுமையாக தீா்க்கவும், அடுத்து நடைபெறவுள்ள கூட்டங்களில் அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT