நாகப்பட்டினம்

இல்லம் தேடி கல்வி விழிப்புணா்புப் பிரசாரம்

6th Dec 2021 11:02 PM

ADVERTISEMENT

சீா்காழி அருகேயுள்ள திருமுல்லைவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சாா்பில் இல்லம் தேடி கல்வித் திட்ட விழிப்புணா்வுப் பிரசார கலைநிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தில் குடியிருப்புகள்தோறும் 20 மாணவா்களுக்கு 1 தன்னாா்வலா் நியமிக்கப்பட்டு மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், கரோனா காலத்தில் விடுப்பட்ட கற்றல் திறன்களை மீட்டெடுக்கவும், கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, திருமுல்லைவாசல் அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் தமிழரசி தலைமை வகித்தாா். உதவித் தொடக்கக் கல்வி அலுவலா்கள் பாபு, செல்வம், வட்டார வளமைய மேற்பாா்வையாளா்கள் புகழேந்தி, ஒருங்கிணைப்பாளா் ரஞ்சித்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் அங்குதன், மஞ்சரிதேவி, கோவி. நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT