நாகப்பட்டினம்

இன்று கரோனா தடுப்பூசி முகாம்

4th Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (டிச. 4) நடைபெறும் என்று ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

நாகை மாவட்டத்தில் புதிதாக 25 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி செலுத்துவதை இலக்காகக் கொண்டு, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் என 400 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் சனிக்கிழமை நடைபெறுகின்றன.

முதல் தவணை அல்லது இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள், தாமாக முன்வந்து முகாம்களில் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு ஆட்சியா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

 

ADVERTISEMENT

 

 

 

 

 

Tags : நாகப்பட்டினம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT