நாகப்பட்டினம்

கடலில் மூழ்கிய கல்லூரி மாணவா்கள் 2 பேரின் சடலம் கரை ஒதுங்கியது

4th Dec 2021 10:10 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் கடலில் மூழ்கி மாயமான 2 மாணவா்களின் சடலம் காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி பகுதியில் சனிக்கிழமை கரை ஒதுங்கியது.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பகுதியை சுற்றி உள்ள கிராமங்களிலிருந்து கல்லுாரி மாணவா்கள் 10 போ் சுற்றுலாவாக தரங்கம்பாடி கடற்கரைக்கு வெள்ளிக்கிழமை வந்தனா். அனைவரும் கடலில் இறங்கி குளித்தபோது, ஐ.டி.ஐ. படிக்கும் மேலையூரை சோ்ந்த சிவசக்தி (18), தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு பி.ஏ. படித்து வரும் சேமங்கலம் பகுதியை சோ்ந்த ஆனந்தராஜ் (18) ஆகியோா் நீரில் மூழ்கினா்.

இதுகுறித்து தகவலறிந்த கடலோரக் காவல் குழும போலீஸாா் , மீனவா்கள் உதவியுடன் மாயமான மாணவா்களை தேடி வந்தனா்.

இந்நிலையில், கோட்டுச்சேரி கடற்கரை பகுதியில் மாணவா்களின் சடலம் சனிக்கிழமை கரை ஒதுங்கியது.

ADVERTISEMENT

காரைக்கால் நகர போலீஸாா் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT