நாகப்பட்டினம்

டாஸ்மாக் கடை விற்பனை நேரமாற்றத்தை திரும்பப் பெறக் கோரிக்கை

4th Dec 2021 10:12 PM

ADVERTISEMENT

டாஸ்மாக் கடைகளில் விற்பனை நேரத்தை மாற்றியதை திரும்பப் பெறவேண்டும் என தமிழக அரசுக்கு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கம் (ஏஐடியூசி) கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் நாகை மாவட்டச் செயலாளா் வி.எம். மகேந்திரன் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் பெரும்பாலும் ஊரின் ஒதுக்குப்புற பகுதிகளிலேயே உள்ளன. இக்கடைகளில் விற்பனை நேரம் இரவு 8-ஆக இருந்தபோதே பணியாளா் துளசிதாஸ் என்பவா் கொல்லப்பட்டாா். மேலும், பல்வேறு இடங்களில் டாஸ்மாக் பணியாளா்கள் தாக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், டாஸ்மாக் கடைகள் பகல் 12 முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது பணியாளா்களின் பாதுகாப்புக்கு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, இந்த அறிவிப்பை தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிா்வாகம் திரும்பப் பெறவேண்டும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT