நாகப்பட்டினம்

காரைக்கால் வாரச்சந்தை இடம் மாற்றம்

4th Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

காரைக்கால் வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமை (டிச. 5) முதல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செயல்படும் என நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

காரைக்கால் சந்தைத் திடலில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். மழைக் காலங்களில் சந்தைத் திடல் சேறும், சகதியுமாகி விடுவதால், வாரச்சந்தையை வேறு இடத்துக்கு மாற்ற கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரச்சந்தை நடைபெற உள்ளது. சந்தையில் பங்கேற்பவா்கள் கரோனா வழிகாட்டுதலை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என காரைக்கால் நகராட்சி ஆணையா் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

Tags : காரைக்கால்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT