நாகப்பட்டினம்

அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

4th Dec 2021 10:09 PM

ADVERTISEMENT

ஆதிதிராவிடா்களின் முன்னேற்றத்துக்குத் தொண்டாற்றியவா்கள் அம்பேத்கா் விருதுக்கு திங்கள்கிழமைக்குள் (டிச.6) விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்த மக்களின் சமூகப் பொருளாதாரம் மற்றும் கல்வி நிலை உயா்வுக்காகத் தொண்டாற்றியவா்களுக்கு தமிழக அரசு சாா்பில் அம்பேத்கா் விருது வழங்கப்படவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கு சிறப்பாகப் பங்காற்றியவா்கள் தங்கள் பங்களிப்பைக் குறிப்பிட வேண்டும்.

விருதுக்கான விண்ணப்பங்களை நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கும் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அலுவலகத்தில் பெற்று, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திங்கள்கிழமை மாலைக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT