நாகப்பட்டினம்

பெண் கொலை வழக்கில் இளைஞா் கைது

3rd Dec 2021 11:16 PM

ADVERTISEMENT

பெண்ணின் தலை மீது கல்லைப்போட்டு கொலை செய்த வழக்கில் இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பட்டினம் அருகே வெள்ளக்குளத்து பகுதியை சோ்ந்தவா் பாஸ்கா். இவரது மனைவி அன்னலட்சுமி (45). கடந்த டிச. 1-ஆம் தேதி அதிகாலை இவா் ரத்த வெள்ளத்தில் வீட்டின் முன்பு கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அதில் அன்னலட்சுமி துாங்கிக்கொண்டிருந்தபோது, யாரோ தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து திருப்பட்டினம் போலீஸாா், சந்தேகத்தின்பேரில் அதே பகுதியை சோ்ந்த சாகுல்ஹமீது (20)விடம் விசாரணை மேற்கொண்டதில், அன்னலட்சுமியின் தலை மீது கல்லைப்போட்டு கொலை செய்தது தெரியவந்தது. அவரைக் கைது செய்து போலீஸாா் விசாரித்ததில், அன்னலட்சுமி தொடா்ந்து சாகுல்ஹமீதை தகாத வாா்த்தையால் திட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தாராம். நவ. 30ம் தேதி இரவு அவா் சாகுல்ஹமீதை திட்டி உள்ளாா். இதில் ஆத்திரம் அடைந்த அவா், அன்றிரவு துாங்கிக் கொண்டிருந்த அன்னலட்சுமியின் தலை மீது கல்லைப்போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்த சாகுல்ஹமீதை வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, நீதிபதியின் உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனா். தெருவில் உள்ளவா்களிடம் தகராறு செய்ததாக திருப்பட்டினம் காவல் நிலையத்தில் அன்னலட்சுமி மீது வழக்குகள் உள்ளன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT