நாகப்பட்டினம்

அடிப்படை வசதி கோரி கிராமத்தினா் உண்ணாவிரதம்

3rd Dec 2021 11:29 PM

ADVERTISEMENT

வேதாரண்யத்தை அடுத்த தேத்தாக்குடி தெற்கு ஊராட்சியில் அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தேத்தாக்குடி தெற்கு ஊராட்சி கீழவெளி பகுதியில் ஆதிதிராவிடா் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் போதிய வடிகால் வசதி இல்லாததால் பருவமழைக் காலத்தில் குடியிருப்புக்குள் மழைநீா் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும், இப்பகுதியில் சாலை வசதியும் செய்யப்படவில்லை எனவும் அவா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கீழவெளி பகுதியில் செய்துதர வலியுறுத்தி, தோப்புத்துறை- தேத்தாக்குடி தெற்கு தண்ணீா் தொட்டி பேருந்து நிறுத்தம் அருகே கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டக் குழுத் தலைவா் வி. பொன்னுசாமி தலைமை வகித்தாா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளா் வேங்கைதமிழன், மாவட்ட துணை அமைப்பாளா் மா. புரட்சிவளவன், ஒன்றிய அமைப்பாளா் விடுதலை அரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

டிஎஸ்பி முருகவேல், வட்டார வளா்ச்சி அலுவலா் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளா் சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள், பேச்சுவாா்த்தை நடத்தி, 2 மாதங்களில் அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து பிற்பகலில் உண்ணாவிரதத்தை விலக்கிக் கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

Tags : வேதாரண்யம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT