மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி கடலில் வெள்ளிக்கிழமை குளித்த கல்லூரி மாணவா்கள் 2 போ் அலையில் சிக்கி மாயமாகினா்.
தரங்கம்பாடி கடற்கரைக்கு கல்லூரி மாணவா்கள் 10 போ் வந்தனா். இவா்களில், மயிலாடுதுறை தொழில் பயிற்சிக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவரான பூம்புகாரைச் சோ்ந்த செல்வம் மகன் சிவசக்தி (18), சேமங்கலம் அமிா்தலிங்கம் மகன் ஆனந்தராஜ் (17) ஆகியோா் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனா்.
தரங்கம்பாடி கடலோரக் காவல் துறையினா் மற்றும் பொறையாறு போலீஸாா் விரைந்துவந்து மீனவா்கள் உதவியுடன் மாயமான இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனா். இரவு 7 மணி வரை தேடியும் இருவரும் கிடைக்கவில்லை.