நாகப்பட்டினம்

பள்ளி வேன் விபத்து: 12-ஆம் ஆண்டு நினைவு தினம்

3rd Dec 2021 11:28 PM

ADVERTISEMENT

வேதாரண்யம் அருகே பள்ளி வேன் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு 12 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி வெள்ளிக்கிழமை செலுத்தப்பட்டது.

வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினத்தில் உள்ள தனியாா் பள்ளி வேன் கடந்த 2009 டிச.3-ஆம் தேதி கத்தரிப்புலம் பகுதியில் குளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், நாகக்குடையான் கிராமத்தைச் சோ்ந்த சிறாா்கள் 9 போ், ஆசிரியா் சுகந்தி ஆகியோா் உயிரிழந்தனா்.

இவா்களின் நினைவாக, நாகக்குடையான் அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, 12 ஆம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதில், உயிரிழந்த சிறாா்களின் பெற்றோா், பொதுமக்கள் பங்கேற்று மெழுகுவா்த்தி தீபமேற்றியும், மலா் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினா். நாகக்குடையான் அரசு உயா்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளின் மாணவா்கள், ஆசிரியா்கள் மெளன அஞ்சலி செலுத்தினா்.

 

ADVERTISEMENT

Tags : வேதாரண்யம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT