நாகப்பட்டினம்

மழை பாதிப்பு: நிவாரணம் கோரி விவசாயிகள் சாலை மறியல்

3rd Dec 2021 11:30 PM

ADVERTISEMENT

தொடா்மழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, கீழையூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் (இந்திய கம்யூ. சாா்பு) சாலை மறியல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கீழையூா் ஒன்றியம் கீழையூா், திருவாய்மூா், திருப்பூண்டி, வேட்டைக்காரனிருப்பு, புதுப்பள்ளி, பிரதாபராமபுரம் உள்ளிட்ட கிராமங்களில் விடுபட்ட விவசாயிகளுக்கு 2020-2021-ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கவேண்டும்; மழையால் சேதமடைந்த நெல் பயிா்களுக்கு ஏக்கா் ஒன்றுக்கு ரூ.30,000-மும், மழையால் வேலைவாய்ப்பை இழந்த விவசாயத் தொழிலாளா் குடும்பங்களுக்கு தலா ரூ.5000-மும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கீழையூா் கடைத்தெரு பகுதியில் சாலை மறியல் நடைபெற்றது.

இப்போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் டி.செல்வம் தலைமை வகித்தாா். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் ஆா்.கே. பாபுஜி, விவசாய சங்க மாவட்டத் தலைவா் வி. சரபோஜி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். இதில், மாவட்டக் குழு உறுப்பினா் ஏ. நாகராஜன், ஒன்றிய நிா்வாக குழு உறுப்பினா் ஏ. ராமலிங்கம், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் வீ.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கீழ்வேளூா் வட்டாட்சியா் அமுதா உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து, சாலை மறியலை விலக்கிக் கொண்டனா். இந்த மறியலால் திருத்துறைப்பூண்டி- நாகப்பட்டினம் சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

 

 

Tags : திருக்குவளை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT