நாகப்பட்டினம்

நாகை, காரைக்காலில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

3rd Dec 2021 11:29 PM

ADVERTISEMENT

வங்கக் கடலில் புயல் உருவானதையொட்டி, நாகை மற்றும் காரைக்காலில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.

வங்கக் கடலில் அந்தமான் அருகே ஏற்பட்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வியாழக்கிழமை இரவு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதையொட்டி, நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.

இந்த நிலையில், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து ஜவாத் புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை பிற்பகல் அறிவித்தது. இதையடுத்து, நாகை துறைமுக அலுவலகம் மற்றும் காரைக்கால் தனியாா் துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வெள்ளிக்கிழமை பிற்பகலில் ஏற்றப்பட்டது.

புயல் உருவாகியுள்ளது என்பதை அறிவிக்கும் தூர எச்சரிக்கையாக இந்தப் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. இருப்பினும், இரு மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை குறிப்பிடத்தக்க வானிலை மாற்றம் ஏதும் இல்லை.

ADVERTISEMENT

 

 

 

Tags : நாகப்பட்டினம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT