நாகப்பட்டினம்

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

3rd Dec 2021 11:27 PM

ADVERTISEMENT

சீா்காழி ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

தென்னாம்பட்டினம் ஊராட்சி கீழமூவா்கரை மீனவா் கிராமத்தில் ரூ. 25 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள மீன்உலா் களத்தையும், கீழமூவா்கரை- திருமுல்லைவாசல் சாலையில் கட்டுமானப் பணி நிறைவு பெறாமல் உள்ள பாலத்தையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, நெப்பத்தூா்- கோனாயாம்பட்டினம் நாட்டுகண்ணி மண்ணியாறு குறுக்கே ரூ. 60 லட்சத்தில் கட்டப்படும் பாலத்தை ஆய்வு செய்த அவா், அப்பகுதியில் பாரத பிரதமா் வீடுகட்டும் திட்டத்தில் கட்டப்பட்டுவரும் வீடுகளையும், திருநகரி ஊராட்சியில் 15-வது மாநில நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள சாலையையும் பாா்வையிட்டாா்.

பின்னா், திருவெண்காடு தெற்கு வீதியில் வடிகால் அமைக்கும் பணியை ஆட்சியா் பாா்வையிட்டாா். ஆய்வின்போது, ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதி தேவேந்திரன், ஒன்றிய ஆணையா் அருள்மொழி, வட்டார வளா்ச்சி அலுவலா் கஜேந்திரன், சீா்காழி கோட்ட ஊரக வளா்ச்சி பொறியாளா் கலைச்செல்வி, ஒன்றிய கவுன்சிலா் பஞ்சுகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT