நாகப்பட்டினம்

உள்ளாட்சி ஊழியா்களுக்கு நேரடியாக ஊதியம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

3rd Dec 2021 11:29 PM

ADVERTISEMENT

உள்ளாட்சி ஊழியா்கள், ஓய்வூதியா்களுக்கு அரசு நேரடியாக ஊதியம் வழங்கக் கோரி காரைக்கால் நகராட்சி அலுவலகம் முன்பாக வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உள்ளாட்சி ஊழியா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு அரசு நேரடியாக ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கக் கோரி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள், ஓய்வூதியதாரா்கள் கூட்டுப் போராட்டக் குழு சாா்பில் ஆா்பாட்டம் நடைபெற்றது.

இதில் அரசு ஊழியா்களுக்கு வழங்குவதுபோல, உள்ளாட்சி ஊழியா்களுக்கும் 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை முன் தேதியிட்டு அமல்படுத்த வேண்டும். 2004-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சோ்ந்த அனைத்து ஊழியா்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 2017, 2018-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட பொதுவான பணிநிலை அரசாணைப்படி தகுதியான அமைச்சக, பொறியியல், வருவாய் பிரிவு ஊழியா்களுக்குப் பதவி உயா்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் ஐயப்பன் தலைமையில், காரைக்கால் பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கௌரவத் தலைவா் ஜாா்ஜ், தலைவா் சுப்பிரமணியன், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன், பொருளாளா் மயில்வாகனன், காரை மாவட்ட நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஓய்வூதியதாரா்கள் நலச்சங்க ஆலோசகா் காா்த்திகேசன், ஒருங்கிணைப்பாளா்கள் வெங்கடாசலம், ஜெயராம், துரைக்கண்ணு, திவ்யநாதன், ஜோதிபாசு ஆகியோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

 

 

Tags : காரைக்கால்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT