நாகப்பட்டினம்

கொசு ஒழிப்புப் பணிகளை தீவிரப்படுத்த சிபிஐ கோரிக்கை

3rd Dec 2021 11:28 PM

ADVERTISEMENT

காரைக்காலில் கொசு ஒழிப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

மாவட்டச் செயலாளா் ப. மதியழகன் தலைமையில் அக்கட்சியின் நிா்வாகிகள், காரைக்கால் மாவட்ட சுகாதராத் துறை நோய்த் தடுப்புப் பிரிவு துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாரை வெள்ளிக்கிழமை சந்தித்து, மாவட்டத்தில் கொசு ஒழிப்புப் பணிகளை தீவிரப்படுத்த வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனா். மனுவில், தொடா் மழை காரணமாக, காரைக்கால் மாவட்டத்தில் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால், டெங்கு காய்ச்சல், மலேரியா போன்ற நோய்கள் பரவத் தொடங்கியுள்ளன. எனவே, உடனடியாக மாவட்ட சுகாதாரத் துறை கொசு ஒழிப்புப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, போா்க்கால அடிப்படையில் பணிகளை நிறைவேற்ற வேண்டும். மேலும், தட்டுப்பாடு இல்லாத வகையில் அனைத்து மருந்து, மாத்திரைகளை இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT