நாகப்பட்டினம்

40 பயனாளிகளுக்கு உதவித்தொகை ஆணை

3rd Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

 தரங்கம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் 40 பயனாளிகளுக்கு உதவித்தொகை ஆணை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

வட்டாட்சியா் ஹரிதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா முருகன் 40 பயனாளிகளுக்கு முதலமைச்சா் உழவா் பாதுகாப்புத் திட்ட உதவித் தொகை, ஊனமுற்றோா் உதவித்தொகை, இந்திரா காந்தி முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணைச் செயலாளா் ஞானவேலன், மாவட்ட பொருளாளா் ஜி என் ரவி, தெற்கு ஒன்றிய செயலாளா் அப்துல் மாலிக், நகர செயலாளா் வெற்றிவேல், ஒன்றிய குழுத் தலைவா் நந்தினி ஸ்ரீதா், வட்ட வழங்கல் அலுவலா் பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

ADVERTISEMENT
ADVERTISEMENT