நாகப்பட்டினம்

கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவு

3rd Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

திருக்குவளை அருகே மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வியாழக்கிழமை உணவு வழங்கப்பட்டது.

திருக்குவளை அருகேயுள்ள சித்தாய்மூா் ஊராட்சியில் கனமழையால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொதுமக்கள் சுமாா் ஆயிரம் பேருக்கு தஞ்சாவூா் ஸ்ரீராமகிருஷ்ண மடம் சாா்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், மடத்தின் தலைவா் சுவாமி விமூா்த்தானந்தமகராஜ் பங்கேற்று பொதுமக்களுக்கு உணவு வழங்கினாா். அப்போது, பாஜக மாவட்ட பொது செயலாளா் வெங்கடாசலம், மாவட்ட பிரசார பிரிவுத் தலைவா் லிங்கம், மாவட்ட பட்டியல் அணி தலைவா் த. இளவரசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT