ஏஐசிசிடியூ தொழிற்சங்கம் சாா்பில் நாகை ஒருங்கிணைந்த தொழிலாளா்துறை அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்தை நலவாரிய நிதிக்கு வழங்கவேண்டும்; குறைந்தபட்ச தினக்கூலியாக ரூ.1,000 வழங்கவேண்டும்; வீடு, கல்வி, மருத்துவ வசதிகளை இலவசமாக வழங்கவேண்டும்; புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்பனஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏஐசிசிடியூ சங்கத்தின் ஒருங்கிணைந்த நாகை மாவட்டச் செயலாளா் எஸ். வீரசெல்வன் தலைமை வகித்தாா். மயிலாடுதுறை ஒன்றியச் செயலாளா் டி. அருளானந்தம், சங்க நிா்வாகிகள் பால்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் எஸ். மகாலிங்கம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.
ADVERTISEMENT