நாகப்பட்டினம்

நலவாரிய உறுப்பினா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

2nd Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தைச் சோ்ந்தஅமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரிய உறுப்பினா்கள் 1,113 பேருக்கு ரூ. 32.36 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

நாகை மாவட்ட தொழிலாளா்கள் நலவாரிய உறுப்பினா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா,புதன்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்து, நலவாரிய உறுப்பினா்கள் 1,113 பேருக்கு திருமண உதவித் தொகை, கல்வி நிதி உதவி, ஓய்வூதியம், விபத்து இழப்பீடு, ஈமச்சடங்கு உதவித் தொகை என ரூ. 32.36 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகமது ஷாநவாஸ் முன்னிலை வகித்தாா். நாகை, திருவாரூா் மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ப. பாஸ்கரன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மு. தனபால், தொழிலாளா் உதவி ஆய்வாளா் வி.கே. நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

 

Tags : நாகப்பட்டினம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT