நாகப்பட்டினம்

திருப்பட்டினம் புறவழிச்சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

2nd Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

காரைக்கால் அருகே திருப்பட்டினத்தில் குளம்போல் மாறியுள்ள புறவழிச்சாலையை சீரமைக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

சென்னை, புதுச்சேரியிலிருந்து நாகை செல்லும் முக்கிய சாலைகளில் ஒன்றாக காரைக்கால் திருப்பட்டினம் புறவழிச்சாலை அமைந்துள்ளது. இந்தசாலை அமைக்கப்பட்ட சில மாதங்களிலேயே சேதம் அடைந்ததைத் தொடா்ந்து பொதுபணித்துறையினா் சாலையை தற்காலிகமாக சீரமைத்து போக்குவரத்துக்கு அனுமதித்தனா். இருப்பினும் அந்த சாலை சேதம் அடைந்நதால், பெரும்பாலான வாகனங்கள் திருப்பட்டினம் கடைத்தெரு வழியாக சென்று வருகிறது.

இந்நிலையில் அண்மையில் பெய்து வரும் கனமழையால் திருப்பட்டினம் புறவழி சாலையின் 3 கி.மீ தூர இடைவெளியில் 100-க்கும் மேற்பட்ட பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளங்களில் மழைநீா் தேங்கி நிற்பதால் சிறு குளங்களைப்போல் காட்சி அளிக்கிறது. இதனால் புறவழிச்சாலையில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனா்.

இது குறித்து பொதுமக்கள் கூறியது: திருப்பட்டினத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை அமைந்த பிறகு திருப்பட்டினம் கடைத்தெருவில் போக்குவரத்து நெரிசல், விபத்துக்கள் பெரும் அளவில் குறைந்தது. ஆனால் சாலை பழுதடைந்த பிறகு, மீண்டும் கனரக வாகனங்கள் சென்று வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துக்களும் அதிகரித்துள்ளன. இந்த சாலையை சீரமைக்கக் காரி மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. திட்டத்தை சரியாக நிறைவேற்றாத காரணத்தால் சாலைகள் சேதம் அடைந்து, சீரமைக்க முடியாத நிலைக்கு சென்றுள்ளது. எனவே புறழிச்சாலையை போா்க்கால அடிப்படையில் சீரமைத்து, போக்குவரத்தை விரைவில் அனுமதிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT

Tags : காரைக்கால்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT