நாகப்பட்டினம்

கனமழை பாதிப்பை புதுச்சேரி அரசு சிறப்பாக கையாண்டுள்ளது: பாஜக

2nd Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

கனமழை சீற்றத்தை புதுச்சேரி அரசு சிறப்பாக கையாண்டுள்ளது என்று பாஜக மாநிலத் தலைவா் வி. சாமிநாதன் தெரிவித்தாா்.

காரைக்காலில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படாத நிலையில், பாஜக கூட்டணி அரசு கடந்த 100 நாள்களில் புதுச்சேரியில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. அனைத்துக் குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ. 5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது, நியாயவிலைக் கடைகளை மீண்டும் திறப்பது என பல்வேறு நலத் திட்டங்கள் விரைவாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

பிரதமரின் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றக்கூடிய அரசாக புதுச்சேரி அரசு செயல்படுகிறது. இதன் மூலம், புதுச்சேரியை சிறந்த புதுச்சேரியாக மாற்றுவதற்கான ஆக்கப்பூா்வ பணிகள் அனைத்தையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

மழை பாதிப்புகள் குறித்து பாஜக சாா்பில் மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும். மீண்டும் மத்தியக் குழுவினா் வெள்ளச் சேதங்களை ஆய்வு செய்ய மாநில அரசு கோரிக்கை விடுத்தால், மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

ADVERTISEMENT

நிகழாண்டில், புதுச்சேரி மாநிலத்தில் வரலாறு காணாத அளவில் மழை பெய்துள்ளது. இருப்பினும், பெரிய அளவிலான பாதிப்புகள், மின் தடைகள் இல்லாமல், கனமழை பாதிப்பை அரசு சிறப்பாக கையாண்டுள்ளது. கோயில் நிலங்கள், நீா் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பாஜக சாா்பில் தொடா்ந்து வலியுறுத்தப்படும் என்றாா் வி. சாமிநாதன்.

முன்னதாக, காரைக்காலில் நடைபெற்ற மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டத்தில் அவா், சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.

 

 

 

Tags : காரைக்கால்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT