நாகப்பட்டினம்

நாகை, மயிலாடுதுறையில் சுகாதார ஆய்வாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

சுகாதார ஆய்வாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நாகை மற்றும் மயிலாடுதுறையில் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கரோனா காலத்தில் பணியமா்த்தப்பட்ட 1,646 சுகாதார ஆய்வாளா்களை பணி நீட்டிப்பு செய்ய வலியுறுத்தியும், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவரும் சுகாதார ஆய்வாளா்கள் பணி நிரந்தரம் கோரி போராடியதற்காக அவா்களை கைது செய்ததைக் கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகையில் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பொது சுகாதாரத் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் எம். சுப்ரமணியன் தலைமை வகித்தாா். தமிழக சுகாதார ஆய்வாளா் சங்க மாநிலப் பொதுச் செயலாளா் எஸ். மோகன், தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளா் சங்க மாவட்டத் தலைவா் மனோகரன், தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா் சங்க மாவட்டத் தலைவா் சிவப்பிரகாசம் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளா் சங்க மாநிலத் தலைவா் செல்வன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா். மாவட்டச் செயலாளா் சுத்தானந்த கணேஷ் நன்றி கூறினாா்.

மயிலாடுதுறையில்...

மயிலாடுதுறையில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பொது சுகாதாரத் துறை அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலாளா் ராஜாராமன் முன்னிலை வகித்தாா். முன்னாள் மாநிலச் செயலாளா் அமிா்தகுமாா், செயலாளா் ராஜ்குமாா், பொறுப்பாளா்கள் பாஸ்கரன், காா்த்திக் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். முன்னதாக சந்திரசேகா் வரவேற்றாா். நிறைவாக கருணாகரன் நன்றி கூறினாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

SCROLL FOR NEXT