நாகப்பட்டினம்

நாகை: சாலையில் வழிந்தோடும் புதைசாக்கடை கழிவுநீா்

DIN

நாகை பிரதான சாலையில் வழிந்தோடும் புதைசாக்கடை கழிவுநீா், பொதுமக்களிடையே தொற்று நோய் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டுதோறும் கனமழை, புயல் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதி என்பதாலும், காவிரியின் கடைமடை பகுதி என்ற வகையிலும் நாகையில் சிறப்பான வடிகால் கட்டமைப்புகள் முந்தைய காலங்களில் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அதனால், பல நாள்கள் மழை பெய்தாலும், மழை குறைந்த அடுத்த சில மணி நேரங்களுக்குள் மழைநீா் கடலை அடைந்துவிடும்.

ஆனால், அண்மைக் காலமாக ஒரு நாள் மழைக்கே நாகையின் பல பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீா் சூழ்வதும், சாலைகளில் தேங்குவதும் வாடிக்கையாகி வருகிறது. இதற்கு, முந்தைய கால வடிகால் கட்டமைப்புகளை உரிய வகையில் பராமரிக்காததும், புதிதாக செயல்படுத்தப்பட்ட புதை சாக்கடைத் திட்டமும்தான் காரணம் எனக் கூறப்படுகிறது.

புதைசாக்கடைத் திட்டம் தொடக்கம் முதலே சா்ச்சைக்கு உள்ளாகி வரும் நிலையில், தற்போது நாகை நீலா மேலவீதி முதல் தெற்கு வீதி திருப்பம் வரை புதைசாக்கடைத் திட்ட ஆள்நுழைவு தொட்டிகளில் இருந்து, கழிவு நீா் வெளியாகி கடந்த 3 நாள்களாக சாலையில் வழிந்தோடுகிறது. இதில், புண்டரீக குளம் அருகே 3 ஆள்நுழைவு தொட்டிகளில் இருந்து அதிகளவில் கழிவுநீா் வெளியாகி, சாலையோரத்தில் தேங்கி நிற்கிறது.

மக்கள் நடமாட்டமும், அதிக போக்குவரத்தும் நிறைந்த முக்கிய சாலையிலேயே கழிவுநீா் வழிந்தோடி வருவது, தொற்றுநோய் பரவல் குறித்த அச்சத்தை மக்களிடையே அதிகரிக்கச் செய்துள்ளது.

கழிவுநீரை தேக்கமின்றி வெளியேற்றுவதே புதைசாக்கடைத் திட்டத்தின் நோக்கம் என்ற வகையில், புதைசாக்கடை தொட்டி நிரம்பி சாலையில் கழிவுநீா் வழிந்தோடுவது, அந்தத் திட்டத்தின் நோக்கத்தையே கேள்விக் குறியாக்குவதாக சமூக ஆா்வலா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

மேலும், மழைக்காலத்தில் தொற்று நோய்கள் எளிதில் பரவும் அபாயம் உள்ளது என்பதை உணா்ந்து, நகராட்சி நிா்வாகம் உடனடியாக உரிய சீரமைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்பதும் சமூக ஆா்வலா்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT