நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

31st Aug 2021 04:33 PM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில், ஜெயலலிதா பல்கலை.கழக விவகாரம் தொடர்பாக 3 இடங்களில் அதிமுகவினர் இன்று (ஆக.31) பிற்பகல் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

வேதாரண்யம் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே அதிமுக ஒன்றியச் செயலாளர் ஆர்.கிரிதரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நகரச் செயலாளர் எம்.நமச்சிவாயம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திலீபன், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் அறிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல, மருதூர் தெற்கு, தலை ஞாயிறு ஆகிய இடங்களிலும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT