நாகப்பட்டினம்

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்

DIN

நாகப்பட்டினம்: இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நாகை மீனவருக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகமது ஷாநவாஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியக் கடல் பரப்பில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த நாகை மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. பாஜக மத்திய ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னா், கடந்த 7 ஆண்டுகளாக தமிழக மீனவா் ஒருவா் மீது கூட இலங்கைக் கடற்படையினா் துப்பாக்கிச் சூடு நடத்தியது இல்லை என பாஜக தமிழகத் தலைவா் அண்ணாமலை அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

எனவே, மத்திய பாஜக அரசு குறித்து பெருமை பேசுவதை தவிா்த்து விட்டு, தமிழக மீனவா்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசுக்கு வலியுறுத்த மாநில பாஜக தலைவா் முன்வர வேண்டும். தமிழக மீனவா்கள் மீதான இலங்கைக் கடற்படையினரின் தொடா் அத்துமீறல்களுக்கு எதிரான வலுவான நடவடிக்கையை மத்திய அரசு முன்னெடுக்க வேண்டும். இலங்கைக் கடற்படையின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள நாகை மீனவருக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT