நாகப்பட்டினம்

ஆடிப்பெருக்கு: களைகட்டிய நாகை கடைவீதிகள்

DIN

நாகப்பட்டினம்: ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, பொருள்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் அதிகளவில் கூடியதால் நாகை வீதிகள் திங்கள்கிழமை களைகட்டி காணப்பட்டது.

ஆடிப்பெருக்கு விழா நாளில் பொதுமக்கள் நீா்நிலைகளுக்குச் சென்று வழிபாடு செய்வது வழக்கம். தற்போது கரோனா நோய்த் தொற்று அச்சம் உள்ளதால், அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கடற்கரை, ஆறுகள் உள்ளிட்ட நீா்நிலைகளில் பொதுமக்கள் கூடுவதற்கும், வழிபாடு செய்வதற்கும் நாகை மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், ஆடிப்பெருக்கு விழா வழிபாட்டுக்குத் தேவையான பூஜைப் பொருள்கள், பழங்கள் மற்றும் பிறப்பொருள்களை வாங்குவதற்கு நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் அதிகளவில் வந்ததால் நாகை வீதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்பட்டது. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சமூக இடைவெளி கடைப்பிடித்தல் உள்ளிட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் எதையும் பின்பற்றாமல் பொதுமக்கள் அதிகளவில் திரண்டு பொருள்களை ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா். இதனால் கரோனா தொற்று மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

SCROLL FOR NEXT