நாகப்பட்டினம்

ஆடிப்பெருக்கு: சீர்காழியில் பழங்கள், பூக்கள் விற்பனை விறுவிறுப்பு

2nd Aug 2021 12:16 PM

ADVERTISEMENT

ஆடிப்பெருக்கு சீர்காழியில் பழங்கள் பூக்கள் விற்பனை விறுவிறுப்பு நடைபெற்று வருகிறது. 
விவசாயத்திற்கு பிரதானமாக இருக்கும் காவிரி நீருக்கு நன்றி சொல்லும் விதமாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கன்று காவிரிக்கரை ,ஆறுகள், கோயில் குளங்கள் போன்ற நீர்நிலைகளில் பெண்கள் ஒன்று கூடி வெல்லம் கலந்த அரிசி ,பழங்கள் வைத்து மஞ்சளில் செய்து வைத்த விநாயகருக்கு பூஜைகள் செய்து காவிரி நீர் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீருக்கு நன்றி செலுத்துவர். சிலர் தங்கள் வீடுகளில் வாசல், மற்றும் அடிபம்பு ஆகியவற்றுக்கும் பூஜைகள் செய்து வழிபடுவர்.

இதையும் படிக்கலாமே| கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும்: கமல்ஹாசன் வலியுறுத்தல்

வழிபாட்டிற்குப் பின்னர் பெண்கள் தங்களுக்குள் மஞ்சள் கயிறு அணிந்து வெல்லம் கலந்த அரிசி பழங்களைப் பகிர்ந்து இவ்விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அவ்வாறு கொரோனா 2ம் அலைக்கு பிறகு முதல் விழாவாக ஆடிப்பெருக்கு விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. விழாவிற்காக சீர்காழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் சீர்காழி நகருக்கு வருகை தந்து பழங்கள் ஆகியவற்றை வாங்கி செல்வது வழக்கம்.  

ADVERTISEMENT

சீர்காழி கடைவீதியில் பேரிக்காய், கொய்யாப்பழம் ,விளாம்பழம், மாம்பழம், சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை போன்ற பழவகைகள் விற்பனைக்காக ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ளன.புதிதாக பல தரை கடைகளும் ஆடிப்பெருக்கு விழாவிற்காக புதிதாக வந்துள்ளன. இதேபோல் மஞ்சள் கயிறு, குங்குமம் காதோலை கருகமணி விற்பனை செய்யும் கடைகளும் அதிகமாக இன்று தொடங்கப்பட்டுள்ளது. 
சிலர் பொரி வாங்கி படைப்பது வழக்கம் அதற்காக பொரி விற்பனையும் விறுவிறுப்பு அடைந்துள்ளது. சீர்காழி கடைவீதியில் திரும்பிய பக்கமெல்லாம் பழங்கள் காதோலை கருகமணி விற்பனை கடைகள் அதிகரித்துள்ளன .இதேபோல் பூ வியாபாரம் சூடுபிடித்துள்ளது. மல்லி, முல்லை கதம்பம் அகிய பூக்கள் வருகையும் அதிகரித்துள்ளது.

Tags : Aadi Perukku Sirkali
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT