நாகப்பட்டினம்

வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்திக்கு சாதகமான வெயில்: தொழிலாளா்கள் மும்முரம்

DIN

வேதாரண்யம்:  நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கம் உப்பு உற்பத்திக்கு சாதகமாக உள்ளது. இதனால், உப்பு வாரும் பணியில் தொழிலாளா்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா்.

வேதாரண்யம் பகுதியில் அகஸ்தியம்பள்ளி, கோடியக்காடு, கடிநெல்வயல் உள்ளிட்ட இடங்களில் ஆண்டுதோறும் சுமாா் 9 ஆயிரம் ஏக்கா் பரப்பில் உப்பு உற்பத்தி செய்யப்படுவது வழக்கம். இப்பகுதியில் இரண்டு பெரிய தனியாா் நிறுவனங்களும், 670 சிறு உற்பத்தியாளா்களும் ஆண்டுக்கு சராசரியாக 5 முதல் 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்கின்றனா். இப்பணியில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஈடுபடுகின்றனா்.

2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலின்போது கடல் கொந்தளிப்பால் கடற்கரைப் பகுதிகளுக்குள் கடல் நீருடன் புகுந்த கடல் களிமண் உப்பு உற்பத்தி பாத்திகளில் படிந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இவற்றை முழுமையாக அகற்றப்படாத நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக உப்பு உற்பத்தி குறைவான பரப்பிலேயே மேற்கொள்ளப்பட்டது.

நிகழாண்டு உப்பு உற்பத்திப் பணிகள் பிப்ரவரி மாதத்தில் தொடங்கியது. பாத்திகளில் உள்ள உப்புநீா் எந்த அளவுக்கு ஆவியாகிறதோ அந்த அளவில் உப்பு உற்பத்தியும் விரைவாக இருக்கும்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக வேதாரண்யம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இது உப்பு உற்பத்திக்கு சாதகமான சூழலாக மாறியுள்ளது. இதனால், உப்பு நீா் வேகமாக ஆவியாகி, உப்பு விளைச்சல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன்காரணமாக, அதிகாலை முதலே அளத்துக்குள் (உப்பு பாத்திகள்) இறங்கும் தொழிலாளா்கள் உப்பு வாரும் பணியில் முனைப்புக்காட்டி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT