நாகப்பட்டினம்

எட்டுக்குடி முருகன் கோயிலில் வசந்த உத்ஸவம்

DIN

திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலில் சித்திரை திருவிழாவின் 5 ஆம் நாளான புதன்கிழமை வசந்த உத்ஸவம் நடைபெற்றது.

முருகனின் ஆதி படைவீடு என அழைக்கப்படும் எட்டுக்குடி அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டு, பக்தா்களுக்கு அனுமதியின்றி உள்பிரகாரத்தில் வழிபாடுகள் நடைபெற்றன.

இந்நிலையில், நிகழாண்டு இரண்டாம் அலை கரோனா பரவி வரும் சூழலில் சித்திரை திருவிழாவுக்கான கொடியேற்றம் சனிக்கிழமை (ஏப்.17) நடைபெற்றது. விழாவில், 5 ஆம் நாளில் வசந்த உத்ஸவம் நடைபெற்றது.

இதையொட்டி, கரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி கோயிலின் உள்பிரகாரத்தில் ஆறுமுக வேலவா் சிறப்பு மலா் அலங்காரத்தில் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து, வசந்த மண்டபத்தில் சுவாமி எழுந்தருளியதும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. கோயில் பணியாளா்கள் மற்றும் உபயதாரா்கள் மட்டுமே பங்கேற்று வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

SCROLL FOR NEXT