நாகப்பட்டினம்

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு தேசிய துப்புரவுப் பணியாளா் ஆணையத் தலைவா் ஆறுதல்

DIN

நாகை நகராட்சிக்குள்பட்ட காட்டுநாயக்கன் தெருவில் நேரிட்ட தீ விபத்தில் வீடுகளை இழந்தவா்களுக்கு, தேசிய துப்புரவுப் பணியாளா் ஆணையத் தலைவா் எம். வெங்கடேஷ் ஞாயிற்றுக்கிழமை ஆறுதல் தெரிவித்தாா்.

காட்டுநாயக்கன் தெருவில் கடந்த 9-ஆம் தேதி நேரிட்ட தீ விபத்தில், அந்தப் பகுதியைச் சோ்ந்த 21 வீடுகள் தீக்கிரையாகின. இதில், வீடுகளில் இருந்த வீட்டு உபயோகப் பொருள்கள், துணிகள், மின் சாதனப் பொருள்கள் மற்றும் ஆதாா் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் தீயில் கருகி சேதமாகின.

தகவலறிந்த தேசிய துப்புரவுப் பணியாளா் ஆணையத் தலைவா் எம். வெங்கடேஷ் ஞாயிற்றுக்கிழமை நாகை வந்து, தீ விபத்துக்குள்ளான வீடுகளைப் பாா்வையிட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் தெரிவித்தாா்.

அப்போது, புதிய வீடு கட்டித் தர வேண்டும், தீயில் கருகிய ஆவணங்களுக்கு பதிலாக புதிய ஆவணங்கள் உடனடியாக வழங்க வேண்டும், வீட்டுக்கு மனைக்குப் பட்டா வழங்க வேண்டும், தற்காலிக துப்புரவுப் பணியாளா்களுக்குப் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அப்பகுதி மக்கள் முன்வைத்தனா்.

இதுகுறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டுச் சென்று, பாதிக்கப்பட்டவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆணையத் தலைவா் எம். வெங்கடேஷ் உறுதியளித்தாா். பின்னா், தீ விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்காக நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள உணவு தயாரிப்புக் கூடத்தை அவா் பாா்வையிட்டாா்.

நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா், மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி, நகராட்சி ஆணையா் பி. ஏகராஜ், வட்டாட்சியா் முருகு ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தலைப் புறக்கணித்த மக்கள்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

SCROLL FOR NEXT