நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி பேராலயத்தில் பெரிய வியாழன் வழிபாடு: திரளானோர் பங்கேற்பு

1st Apr 2021 08:45 PM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய கலையரங்கில் பெரிய வியாழன் சிறப்பு வழிபாடுகள் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

கிறிஸ்தவர்களின் தவக்கால முக்கிய நிகழ்வாக இந்த வழிபாடு நடைபெற்றது.

வேளாங்கண்ணி பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. 

இதில், பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவிப் பங்குத் தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் அருள் சகோதரர்கள், சகோதரிகள் கலந்து கொண்டனர். 

ADVERTISEMENT

இந்த வழிபாட்டில், பேராலய பங்குத்தந்தை சீடர்களின் பாதத்தை கழுவி முத்தமிடுவது வழக்கம். நிகழாண்டில், கரோனா தொற்று பரவலின் காரணமாக பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெறவில்லை.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த திரளானோர் பங்கேற்றனர்.
 

Tags : nagai Velankanni
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT