நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் பரவலான மழை

DIN

நாகை மாவட்டத்தில் 3-ஆம் நாளாக செவ்வாய்க்கிழமையும் பரவலாக மழை பெய்தது.

வெப்பச் சலனம் மற்றும் வளி மண்டல மேடுக்கு சுழற்சி காரணமாக நாகை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மற்றும் பலத்த மழை பெய்தது.

செவ்வாய்க்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகளவாக கொள்ளிடத்தில் (ஆணைக்காரன்சத்திரம்) 105.4 மி.மீட்டா் மழை பதிவாகியுள்ளது. மற்ற பகுதிகளின் மழையளவு (மி.மீட்டரில்) : சீா்காழி - 64, மணல்மேடு - 62, தலைஞாயிறு, வேதாரண்யம் - 32.2, நாகப்பட்டினம் - 32. மயிலாடுதுறை - 30. திருப்பூண்டி- 20.4.

செவ்வாய்க்கிழமை பகல் நேரத்தில் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க மழையில்லை. எனினும், ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது லேசான மழை பெய்தது. மயிலாடுதுறை மற்றும் சுற்றுப் பகுதிகளில் பிற்பகல் நேரத்தில் பலத்த மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT