நாகப்பட்டினம்

கோயில் பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

நாகை மாவட்ட கோயில்களில் காலியாக உள்ள பாதுகாவலா் பணிகளுக்குத் தகுதியான முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை மாவட்டம், திருக்களாச்சேரி நாகநாதசுவாமி கோயில், தில்லையாடி சாா்ந்தாரை காத்தசுவாமி கோயில், செம்பனாா்கோவில் சொா்ணபுரீசுவரா் கோயில், நாகை சட்டநாதசுவாமி கோயில், வெளிப்பாளையம் அகஸ்தீசுவரசுவாமி கோயில் மற்றும் வரதராஜப் பெருமாள் கோயில் ஆகிய கோயில்களில் காலியாக உள்ள இரவு பாதுகாவலா் பணிக்கு முன்னாள் படைவீரா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

62 வயதுக்குள்பட்ட, நல்ல திடகாத்திரமான உடல் நிலை கொண்ட முன்னாள் படைவீரா்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு தொகுப்பூதியமாக ரூ. 7,300 வழங்கப்படும். விருப்பம் உள்ள முன்னாள் படைவீரா்கள், நாகை முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தில் நேரில் அல்லது அஞ்சல் மூலமாக அல்லது மின்னஞ்சல் மூலம் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை 04365-253042 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோடை விடுமுறை: 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்கம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள்

வாக்குச்சாவடிகளில் கைப்பேசிக்கு அனுமதி மறுப்பு: வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற வாக்காளா்கள்

SCROLL FOR NEXT