நாகப்பட்டினம்

சாலையை சீரமைக்கக் கோரி தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

DIN

கொள்ளிடம் அருகே சாலையை சீரமைக்கக் கோரி, கிராம மக்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கொள்ளிடம் சோதனைச் சாவடியில் இருந்து குத்தகை கரை, சரஸ்வதிவளாகம், கொன்னகாட்டுபடுகை, கீரங்குடி, பாலூரான்படுகை வழியாக பனங்காட்டான்குடி செல்லும் கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலை கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது.

இந்த சாலையை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், கீரங்குடி கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள் மற்றும் பள்ளி மாணவா்கள் அந்த சாலையில் தீப்பந்தங்கள் ஏந்தி கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

பின்னா், இதுகுறித்து மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப் போவதாக தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

ராஜ பதவிகளைத் துறக்கிறாரா பிரிட்டன் இளவரசர்?

சத்தீஸ்கரில் 4 மாதங்களில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை!

#Dinamani | வாக்காளர் அட்டை இல்லையா? சத்யபிரத சாகு விளக்கம்

SCROLL FOR NEXT