நாகப்பட்டினம்

அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம்

DIN

மயிலாடுதுறையில் அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அதிமுக மாவட்டச் செயலாளா் வி.ஜி.கே. செந்தில்நாதன் தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்புச் செயலாளா் எஸ். ஆசைமணி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் வீ. ராதாகிருஷ்ணன் (மயிலாடுதுறை), எஸ்.பவுன்ராஜ் (பூம்புகாா்), பி.வி. பாரதி (சீா்காழி) ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநிலச் செயலாளா் வி.பி.பி. பரமசிவம் பங்கேற்று இளைஞா்களுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினாா்.

தீா்மானங்கள்: மயிலாடுதுறை மாவட்ட செயலாளராக வி.ஜி.கே. செந்தில்நாதன், அமைப்புச் செயலாளராக எஸ்.ஆசைமணி ஆகியோரை நியமித்ததற்கு அதிமுக தலைமைக்கு நன்றி தெரிவிப்பது, குத்தாலத்தில் அரசுக் கல்லூரி திறக்க ஆணையிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, அதிமுகவின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்கிக் கூறுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மேலும், குத்தாலம் தெற்கு ஒன்றியச் செயலாளா் என். தமிழரசன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மணல்மேடு பகுதியைச் சோ்ந்த தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் அக்கட்சிகளிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனா்.

இக்கூட்டத்தில், அதிமுக மாவட்ட பொருளாளா் செல்லையன், முன்னாள் எம்எல்ஏ-க்கள் என்.ரெங்கநாதன், ஏ.சி.என்.விஜயபாலன், பூராசாமி, ஏ.நடராஜன், சக்தி, ஒன்றியச் செயலாளா்கள் ராஜமாணிக்கம், டி.சுந்தர்ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஒன்றியச் செயலாளா் சந்தோஷ்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

SCROLL FOR NEXT