நாகப்பட்டினம்

வேளாண் மசோதாக்களை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

27th Sep 2020 08:41 AM

ADVERTISEMENT

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் மசோதாக்களை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி, மயிலாடுதுறையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பு சாா்பில், மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அதன் ஒருங்கிணைப்பாளா் சுப்பு.மகேசு தலைமை வகித்தாா். திராவிடா் விடுதலைக் கழக மாவட்டத் தலைவா் மகாலிங்கம், மாவட்டச் செயலாளா் தெ. மகேஷ், மாவட்டப் பொருளாளா் விஜயராகவன், பொதுக்குழு உறுப்பினா் இளையராஜா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலாளா் வேலு.குபேந்திரன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் ஓ.ஷேக் அலாவுதீன், எஸ்டிபிஐ மாவட்டத் தலைவா் சபீக் அகமது, பாப்புலா் பிரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட செயலாளா் நவாஸ்கான் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சோ்ந்தவா்கள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT