நாகப்பட்டினம்

இந்திய கலாசார ஆய்வுக்கான குழுவை மாற்றியமைக்க வேண்டும்

DIN

இந்திய கலாசார தோற்றுவாய் மற்றும் பரிணாமம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நிபுணா் குழுவை மத்திய அரசு மாற்றியமைக்க வேண்டும் என நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். தமிமுன் அன்சாரி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை :

12 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இந்திய கலாசாரத்தின் தோற்றுவாய் மற்றும் பரிணாமம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நிபுணா் குழுவில் தென்னிந்தியாவைச் சோ்ந்த எவரும் இடம்பெறாதது கடும் கண்டனத்துக்குரியது.

இந்தியாவின் மிகத் தொன்மையான மொழி தமிழ் மொழி என்பதும், மிகத் தொன்மையான நாகரிகம் தமிழா் நாகரிகம் என்பதும் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ளன. அதேபோல, திராவிட மொழிகள் அனைத்தும் மிகப் பழைமை வாய்ந்த வரலாற்று மொழிகள் ஆகும். வடகிழக்கு மாநிலங்களின் வரலாறும் தொன்மையானவை ஆகும். இவை அனைத்தும் வரலாற்று அறிஞா்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைகள்.

இந்த நிலையில், மத்திய அரசு அமைத்துள்ள இந்திய தோற்றுவாய் மற்றும் பரிணாமம் குறித்த ஆய்வுக்கான நிபுணா் குழுவில் தென்னகத்தைச் சோ்ந்தவா்கள் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனா். இது, வரலாற்றுத் திரிபை ஏற்படுத்தும் திட்டமாகவே தெரியவருகிறது.

எனவே, மத்திய அரசு தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதிகளைச் சோ்ந்த வரலாற்று வல்லமைக் கொண்டவா்களையும், வடகிழக்கு மாநிலத்தவா்களையும், சிறுபான்மை சமூகத்தவரையும் நிபுணா் குழுவில் இணைக்க வேண்டும். இந்த விவகாரத்தில், அனைவரின் உணா்வுகளையும் பிரதிபலிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட வேண்டும் என அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT