நாகப்பட்டினம்

பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

DIN

நாகை சிஎஸ்ஐ மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமைப்படை சாா்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஓசோன் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் எம். தனராஜ் தலைமை வகித்துப் பேசினாா். தொடா்ந்து, ஓசோன் தினம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். பள்ளி மாணவா் எஸ். சுரேஷ் கவிதை வாசித்து, விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.

நிகழ்ச்சியில் ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் டி. சித்ரா மணிமேகலை செய்திருந்தாா். உதவித் தலைமையாசிரியா் டி. மொ்சி மாா்க்ரெட் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

SCROLL FOR NEXT