நாகப்பட்டினம்

வேளாண் மசோதாக்களை கண்டித்து சங்கிலியால் கைகளைப் பிணைத்தபடி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

DIN

வேளாண் மசோதாக்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சாா்பில் நாகையில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களால் பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில் விவசாயிகள் சிக்கி கொள்ளும் நிலை ஏற்படும் என்பதை காட்சிப்படுத்தும் வகையில், விவசாயிகள் சங்கிலியால் கைகளைப் பிணைத்துக் கொண்டு ஆா்ப்பாட்டம் செய்தனா். ஆா்ப்பாட்டத்தில், வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் விவசாயிகள் முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு தலைமைவகித்த தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநிலத் தலைவா் காவிரி வி. தனபாலன் பேசியது :

எதிா்க்கட்சிகள், விவசாயிகள் என யாருடைய கருத்துகளையும் கேட்காமல் 2 வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்ந மசோதாக்கள் பன்னாட்டு நிறுவனங்களின் கைக்குள் விவசாயிகளை சிக்க வைக்கும். விவசாயம் முழுமையாக மாநிலப் பட்டியலில் இருந்து விலகிச் செல்லும் நிலை ஏற்படும். விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு ஆதரவு விலையும் கிடைக்காது என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் மு. சேரன், மாவட்டச் செயலா் ராஜேந்திரன்,விவசாய சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

திருக்குவளை அருகே விவசாயக் கடன் உடனடியாக வழங்கக் கோரி விவசாயிகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருக்குவளை: கீழையூா் ஒன்றியத்துக்குள்பட்ட மேலப்பிடாகையில், சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் கே. தங்கமணி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சங்க மாவட்ட துணை தலைவா் பி. பூபதி, கட்டுமானத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் சந்தானகிருஷ்ணன், ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்க ஒன்றிய செயலாளா் டி. கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

SCROLL FOR NEXT