நாகப்பட்டினம்

சீர்காழியில் பெண் அடித்துக் கொலை: இளைஞர் கைது

DIN

சீர்காழியில் கடந்த வாரம் அதிகாலை வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண் கடுமையாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில்  இளைஞர் கைது செய்யப்பட்டார். 

நாகை மாவட்டம் சீர்காழி தென்பாதி திருவள்ளுவர் நகர் இரண்டாவது தெருவில் வசிப்பவர் ஆனந்தஜோதி(52). இவர் ஓதவந்தான்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சித்ரா(49). இவர்களுக்கு சுரேஷ்(26) என்ற மகனும், சுவாதி(22) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் சித்ரா கடந்த 18-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30மணிக்கு தனது வீட்டு வாசலில் கோலம் போட்டுள்ளார். அப்போது பின்னால் வந்த மர்ம நபர் சித்ராவை தலையில் பலமாக தாக்கி அடித்துள்ளார். இதில் தலை சிதறி ரத்தவெள்ளத்தில் சித்ரா சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் அருகில் வசித்த பெண் வெளியே வந்து பார்த்த போது சித்ரா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பது கண்டு அலறியடித்து மற்றவர்களுக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து ஆனந்தஜோதி மற்றும் குடும்பத்தினர் வந்து பார்த்த போதுதான் கோலம் போட வந்த சித்ரா கொலை செய்யபட்டது தெரியவந்தது. 

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சீர்காழி டிஎஸ்பி யுவப்பிரியா தலைமையில் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப் இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் காவல்துறையினர் கொலையாளி யார் என விசாரனை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரனையில் சித்ரா இறந்த போது காதில் அணிந்திருந்த கம்மல்கள் ஏதும் திருடப்படாததால் நகைக்காக நடந்த கொலை இல்லை என தெரியவந்தது. மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் புயல் பாலசந்திரன், மணிகண்ட கணேஷ், ராஜேஷ், லோகநாதன் மற்றும் சார்லஸ் ஆகியோர் கொண்ட 5 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படைகள் இரவு பகலாக தீவிரமாக விசாரனையில் ஈடுப்பட்டனர். அங்கிருந்த கண்காணிப்பு காமிரா அடுத்தடுத்த தெருக்கள் மற்றும் சீர்காழி நகரில் உள்ள அனைத்து கண்காணிப்பு காமிரா பதிவுகளை கொண்டு தீவிரமாக குற்றத்தில் ஈடுப்பட்ட நபரை தேடினர். மேலும் சம்பவம் நடந்த வீட்டிலிருந்து சில மீட்டர் தூரத்தில் உள்ள கழ மலையாற்றின் ஓரத்தில் இரும்பு குழாயை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். 

கொலையாளி தூக்கி வீசி சென்றிருக்கலாம் என விசாரனை செய்தனர். மேலும் ஆனந்த ஜோதி வீட்டில் மற்ற போர்ஷன்களில் குடியிருக்கும் மற்ற குடும்பத்தினரிடமும் தீவிரமாக விசாரனை செய்தனர். அப்போது சம்பவம் நடந்த தினத்தில் கிடைத்த காமிரா பதிவுகள் மற்றும் அங்கு குடியிருந்தவர்களின் செல்போன் அழைப்புகள் என அனைத்தையும் ஆய்வு செய்தபோது ஆனந்த ஜோதி வீட்டின் ஒரு பகுதியில் குடியிருக்கும் ஒரு வீட்டிற்கு வந்து செல்லும் இளைஞர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக விசாரித்ததில் அவர் தான் கொலையில் ஈடுப்பட்டது தெரிய வந்தது. காவல்துறையினர் விசாரனையில் அவர் சீர்காழி சட்டநாதபுரம் கணபதி அஹ்ரஹாத் தெருவைச் சேர்ந்த சையது ரியாஸ்(29) என்பது தெரியவந்தது. இவர் எம்.சேன்ட், ஜல்லி சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். ரியாஸ்தீன், கொலை செய்யப்பட்ட சித்ரா வீட்டில் குடியிருக்கும் ஒரு வீட்டல் உள்ள பெண் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வாராம். 

கணவர் சிங்கப்பூரில் இருப்பதாலும், ரியாஸ் அடிக்கடி வருவதை பார்த்த சித்ரா அந்த இளைஞரை ஏன் அடிக்கடி இங்கு வருகிறாய் என கண்டித்தாராம். இது குறித்து அருகில் வசிப்பவர்களிடமும் சித்ரா கூறி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரியாஸ், சித்ராவை கொலை செய்ய திட்டமிட்டு விடிய காலையிலேயே அவர் கோலம் போடுவது குறித்து தெரிந்து மறைந்திருந்தானாம். கோலம் போட வந்த சித்ராவை இரும்பு பைப்பால் பலமாக தாக்கி கொலை செய்து விட்டு தப்பினானான் என்று காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான். அவனை கைது செய்த காவல்துறையினர் கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதத்தையும் கைப்பற்றினர்.  கொலை செய்த நபரை விரைந்து பிடித்த சீர்காழி காவல்துறை மற்றும் தனிப்படை காவல்துறையினருக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

சித்ராவை கொலை செய்ய திட்டமிட்ட ரியாஸ் அதனை நிறைவேற்ற சில வாரங்களுக்கு முன்பு அதிகாலை சித்ரா வீட்டு வாசல் அருகே ஆட்டோ ஒன்றின் பின்புறம் ஒளிந்திருந்தானாம். ஆனால் அன்றைய தினம் சந்தர்ப்பம் சரியில்லாததால் மற்றொரு நாள் திட்டத்தை நிறைவேற்றியதாக தனிப்படை காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளான். கொலை நடந்த மறுநாள் சித்ரா வீட்டின் மாடியில் அவன் வந்து செல்லும் வீட்டிற்கு வந்துள்ளான். காவல்துறையினர் அந்த வீட்டில் விசரானை மேற்கொண்ட போது எதுவும் தெரியாதது போல் அங்கு சோபாவில் அமர்ந்திருந்தான் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT