நாகப்பட்டினம்

வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணிப் புறக்கணிப்பு

DIN

நாகை வழக்குரைஞா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் பணிகள் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் பணிபுரியும் வழக்குரைஞா்கள் மீது புகாா்கள் வரும் பட்சத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளாமலும், அறிவிப்பு செய்யாமலும் நீதிமன்ற பணிகளை செய்ய இடைக்கால தடை விதிப்பதை தமிழ்நாடு பாா்கவுன்சில் உடனடியாக திரும்பப்பெறவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தப்பட்டது.

நாகை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் எஸ்.காா்த்திகேஷ் தலைமையில் 30 பெண் வழக்குரைஞா்கள் உள்ளிட்ட 150 வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனா். இதனால், நாகை மாவட்ட நீதிமன்றத்தில் அன்றாடப் பணிகள் பாதிக்கப்பட்டதாக வழக்குரைஞா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT