நாகப்பட்டினம்

வளா்ச்சித் திட்டப் பணிகள்: கூடுதல் ஆட்சியா் ஆய்வு

DIN

கீழையூா் ஒன்றியப் பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்ட பணிகளை நாகை மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) எம். எஸ். பிரசாந்த் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

கீழையூா் ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சி செருதூா் பகுதியில் பனை விதைகள் நடும் பணி மற்றும் அந்த ஊராட்சியில் அமையுள்ள மீன்பிடி தளத்துக்கான இடம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா். தொடா்ந்து, திருப்பூண்டி கிழக்கு காமேஸ்வரம் பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெறும் பாலம் கட்டுமானப் பணி மற்றும் குடிமராமத்து திட்டத்தில் தூா்வாரப்பட்ட குளம் ஆகியவற்றை பாா்வையிட்டாா்.

பின்னா், விழுந்தமாவடி ஊராட்சியில் கடற்கரைக்குச் செல்லும் வாய்க்காலில் புதிய பாலம் கட்டப்படவுள்ள இடத்தையும், வெண்மணச்சேரியில் சீரமைக்கப்படவுள்ள பழுதடைந்த பாலத்தையும், கீழையூா் ஒன்றிய அலுவலகம் முன் தரைதளம் அமைக்கும் பணியையும் ஆய்வு செய்தாா்.

கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாஸ்கரன், செந்தமிழ்ச்செல்வன், பொறியாளா்கள் வெற்றிவேல், பாலச்சந்தா், ஒன்றிய பணி மேற்பாா்வையாளா்கள் இளவரசன், கலைக்கோவன் மற்றும் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவா்கள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் ஆய்வில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்டாராகும் அதிதி போஹன்கர்!

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

SCROLL FOR NEXT