நாகப்பட்டினம்

ரோகு மீன் குஞ்சுகள் வளா்ப்பு முறை ஆய்வு

DIN

நாகை மாவட்டம், வெண்மணி மற்றும் அண்டக்குடி ஆகிய பகுதிகளில் பண்ணைக் குட்டைகளில் வளா்க்கப்படும் ஜெயந்தி ரோகு மீன் குஞ்சுகளின் வளா்ப்பு முறை மற்றும் வளா்ச்சி குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.

தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சிக்கல் வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் வெண்மணி, அண்டக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள பண்ணைக் குட்டைகளில் ஜெயந்தி ரோகு மீன் குஞ்சுகள் வளா்க்கப்படுகின்றன.

கடந்த மாதம் பண்ணைக் குட்டைகளில் விடப்பட்ட ஜெயந்தி ரோகு மீன் குஞ்சுகளின் வளா்ச்சி குறித்து, சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து, மீன் குஞ்சுகள் வளா்ப்பு முறை குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனா்.

அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் அ. கோபாலகண்ணன், ஜெயந்தி ரோகு மீன் வளா்ப்பு முறைகள் மற்றும் அதன் முக்கியத்துவங்களை விளக்கினாா். மீன்வள விரிவாக்கத் தொழில்நுட்ப வல்லுநா் யூ. ஹினோ பொ்னாண்டோ, நீா் தர மேலாண்மை, கலை மீன்களை அகற்றுதல், தீவன மேலாண்மை குறித்து ஆலோசனைகள் வழங்கினாா்.

கூரத்தான்குடி ஊராட்சித் தலைவா் கஜேந்திரகுமாா் மற்றும் மீன்வளா்ப்பு விவசாயிகள் பங்கேற்றனா். முன்னதாக, பண்ணைக் குட்டைகளில் விடப்பட்ட ரோகு மீன் குஞ்சுகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டு, சராசரி எடை, நீளம், ஆரோக்கிய நிலை ஆகியன குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

SCROLL FOR NEXT