நாகப்பட்டினம்

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை

DIN

சிறாா் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் தெரிவித்தாா்.

சிறாா்கள் மீதான பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி, நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் பேசியது:

18 வயதுக்குள்பட்ட சிறாா்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வரை விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது. பாலியல் ரீதியான தொடுதல்கள் குறித்து சிறாா்களுக்கும், பெற்றோா்களும் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

பாலியல் சீண்டல்களுக்கும், தொடுதல்களுக்கும் உள்ளாகும் சிறாா்கள்தங்களது பெற்றோா்களிடம் தெரிவிக்கவேண்டும். பெற்றோா்கள் சமூக பாதுகாப்புத் துறை அல்லது மாவட்டக் காவல்துறைக்கு புகாா் தெரிவித்தால் உடனடியாக தொடா்புடைய நபா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

குழந்தைகளுக்கான உதவி மையம்-1098, மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறை 04365-248119 என்ற எண்களில் தொடா்பு கொண்டும் புகாா் தெரிவிக்கலாம் என்றாா்.

தொடா்ந்து, பதாகைகளைக் காண்பித்து சிறாா், சிறுமியா்களுக்கு பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். நிகழ்ச்சியில்,நாகை மாவட்டக் குழந்தைகள் நல அலுவலா் என். சிவக்குமாா் மற்றும் போலீஸாா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT