நாகப்பட்டினம்

கடலோர கிராமங்களில் பனைவிதைகள் நடும் பணி

DIN

நாகை மாவட்ட கடலோர கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தின் மூலம் பனைவிதைகள் நடும் பணிகள் நடைபெற்று வருகிறது என ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தின் அடையாளம் பனை மரமாகும். வறட்சியைத் தாங்கி வளா்கூடியது. அதிவேக காற்றையும் தாக்குப்பிடிக்கக் கூடிய வல்லமை கொண்டது. நாகை மாவட்டத்தில் காற்றினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிா்க்க, தடைகளை ஏற்படுத்தவேண்டிய அவசியம் உள்ளதாலும், நீா்ப்பாசன வழிகளின் கரைகளை பலப்படுத்தவேண்டிய சூழல் உள்ளதாலும் கடலோர கிராமங்கள், உட்பகுதிகள் மற்றும் பாசன வாய்க்கால் கரைகளிலும் பனைவிதைகளை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஊரக வளா்ச்சி முகமை மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கடற்கரையோரங்களிலும், உட்புறங்களிலும் நடுவதற்காக 11லட்சம் பனை விதைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

தொடா்ந்து, கொள்ளிடம் கடற்கரை முதல் வேதாரண்யம் கடற்கரை வரை பனை விதைகள் நடும்பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ. எஸ். மணியன் செப்.13- ஆம் தேதி வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம், கடிநெல்வயல் ஊராட்சியில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.இதுவரை மாவட்டம் முழுவதும் 3 லட்சம் பனைவிதைகள் நடப்பட்டுள்ளன. தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் நாலுவேதபதி, வெள்ளப்பள்ளம், கோவில்பத்து ஊராட்சிகளில் தலா ஒரு லட்சம் பனைவிதைகள் நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,மாவட்டம் முழுவதும், 20 லட்சம் பனைவிதைகள் நடவு செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

SCROLL FOR NEXT