நாகப்பட்டினம்

சீர்காழி அருகே பொதுப்பணித்துறையை கண்டித்து விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டம் 

DIN

சீர்காழி அருகே வாய்க்கால்களில் தண்ணீர் விடாததால் 6 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் தரிசாக உள்ளது. இதைவிட நாற்றங்கால் காய்ந்து வருகிறது. தண்ணீர் விடாத பொதுப்பணித்துறை கண்டித்து விவசாயிகள் வயலில் இறங்கி போராடினர். 

நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்துள்ள திட்டை தில்லைவிடங்கன் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் 6 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்வது வழக்கம் கழுகுமலை ஆற்றுப் பாசனம் மூலம் விவசாயிகள் இப்பகுதியில் சாகுபடிகளை மேற்கொண்டு வந்தனர். இந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்பட்டு விவசாய பணிகளுக்காக தண்ணீர் விடப்பட்டது. இருந்தபோதிலும் காவிரி டெல்டா கடைமடைப் பாசனப் பகுதியான சீர்காழி தாலுக்கா திட்டை தில்லைவிடங்கன் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கழுமலை ஆறு மற்றும் அதன் கிளை வாய்க்காலில் பொதுப்பணித்துறை  தண்ணீர் விடாததால் இப்பகுதியில் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. 

பல முறை கோரிக்கை விடுத்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கழுமலை ஆற்றில் தண்ணீர் திறந்தனர். அந்த தண்ணீர் கடைசிவரை சென்று சேருவதற்குள் நிம்மேலி அருகே ஆற்றின் கரை உடைந்தது. கரையோரம் அனுமதியின்றி மண் எடுத்ததால் கரை உடைந்து தண்ணீர் வீணாவதால் ஆற்றில் தண்ணீர் நிறுத்தபட்டுள்ளது. சிறு ,குறு விவசாயிகள் தண்ணீர் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் நாற்றங்காலை தயார் செய்தனர். இருந்தபோதிலும் தண்ணீர் வராததால் நாற்றங்கால் காய்ந்து வருவதுடன் விவசாயப் பணிகளையும் மேற்கொள்ள முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் இவ்வாண்டு சாகுபடியை செய்ய முடியாமல் விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். 

இதனால் அவர்களது வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. கழுமலை ஆற்றில் உடனடியாக தண்ணீர் விட வேண்டும் என வலியுறுத்தி தில்லை விடங்கள் பகுதியில் வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இன்யும் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்காவிட்டால் வட்டாசியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். விவசாயிகளின் இந்த போராட்ட அறிவிப்பால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

SCROLL FOR NEXT